அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு
6 view
அரச அல்லது அரை அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்துவது தொடர்பான சுற்றறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களே அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர், சில அரச அல்லது அரை அரச நிறுவனங்கள் வரி செலுத்தும் சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியிருந்ததாக தெரிவித்தார். எவ்வாறாயினும், நாட்டின் தற்போதைய நிலையில் இவ்வாறான முறைகேடுகளை சகித்துக் கொள்ள முடியாது எனவும், இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
The post அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச நிறுவனங்கள் வரி செலுத்துவதை இடைநிறுத்துவது தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
