தொடர்ந்தும் இழுபறி நிலையில் மொட்டு- யானை கலப்பு!
7 view
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.பஸில் ராஜபக்ச உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் தனித்துப் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும், வேறு சிலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர் எனவும் தென்னிலங்கை வாராந்தப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-யானைக் கட்சியோ மொட்டுக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றது.மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைப் பல தடவைகள் சந்தித்து களநிலவரம் பற்றி பஸில் ஆராய்ந்தார். அப்போது அதிகமானவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றே கூறினார்கள். கிராம மட்டத்தில் யானைக்குச் செல்வாக்கு இல்லை என்றும் அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டால் தோல்வியடைந்து விடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.ஒருவேளை இணைந்து போட்டியிட்டால் மொட்டுச் சின்னத்தில்தான்…
The post தொடர்ந்தும் இழுபறி நிலையில் மொட்டு- யானை கலப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தொடர்ந்தும் இழுபறி நிலையில் மொட்டு- யானை கலப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
