காங்கேசன்துறையில் 32 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வங்கி கிளை திறப்பு!
7 view
காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் கிளை இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கை வங்கியின் காங்கேசன் துறை கிளை அப்பகுதி மக்களுடன் அவ்விடத்தில் இருந்து இடம்பெயர்ந்து இருந்தது. இந்நிலையில் சுமார் 32 வருடங்களின் பின்னர் நவீனதொழில்நுட்ப வசதிகளுடன் இன்றைய தினம் காங்கேசன்துறையில் மீள திறந்துவைக்கப்பட்டது. குறித்த வங்கி கிளைதிறப்பு நிகழ்வில் இலங்கை வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர், வட பிராந்திய முகாமையாளர், யாழ் மாவட்ட ராணுவ கட்டளை தளபதி, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை வங்கியின் வங்கி முகாமையாளர்கள் வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
The post காங்கேசன்துறையில் 32 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வங்கி கிளை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காங்கேசன்துறையில் 32 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வங்கி கிளை திறப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
