மோதலை கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்!
6 view
ஹம்பாந்தோட்டையில் உள்ள இலங்கை கடலோர காவல்படை நிலையத்தில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இலங்கை கடலோர காவல்படை அதிகாரிகளுக்கும் உள்ளூர் மீனவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால், நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு ந்டத்தியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
The post மோதலை கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மோதலை கட்டுப்படுத்த வான் நோக்கி துப்பாக்கியால் சுட்ட இலங்கை கடற்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
