பிறந்து 10 நாட்களேயான சிசுவை முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற தாய்! – இலங்கையில் கொடூரம்
7 view
வீதியில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றில் கைவிடப்பட்ட நிலையில் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் தெரிவித்தனர். பிறந்து 10 நாட்களேயானதென கருதப்படும் பெண் சிசுவொன்றே இன்று (9) காலை இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தலவாக்கலை ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திற்கு அருகாமையில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் குறித்த சிசு கைவிடப்பட்டிருந்ததாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குழந்தையை லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த பெண் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாயை கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
The post பிறந்து 10 நாட்களேயான சிசுவை முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற தாய்! – இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிறந்து 10 நாட்களேயான சிசுவை முச்சக்கரவண்டியில் கைவிட்டுச் சென்ற தாய்! – இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
