தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை – கோவிந்தம் கருணாகரன் காட்டம்!
6 view
தமிழரசு கட்சி பிரிந்து செல்லுமாயின் பிரிந்து சென்ற ஏனைய கட்சிகளை புதிதாக இணைத்து புதிய வலுவான கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக ரெலோவின் செயலாளர் நாயகம் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டுமென கூறுவதற்கு தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையுமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி தனித்து தேர்தலில் போட்டியிடுமாக இருந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளையும் ஏனைய தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்கபோவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்து பலமானஒரு கூட்டணியை உருவாக்குவோம் என்றும் கோவிந்தம் கருணாகரன் மேலும் தெரிவித்தார்.
The post தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை – கோவிந்தம் கருணாகரன் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசு கட்சிக்கு எந்த அருகதையும் இல்லை – கோவிந்தம் கருணாகரன் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
