இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்; முக்கிய பிரதானிகள் இலங்கைக்கு வருகை
7 view
நாட்டின் ஏற்றுமதியினை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான 3 ஆம் கட்ட உத்தேச வர்த்தக பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமாகவுள்ளது. 7 துறைகள் தொடர்பில், இந்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, பண்ட வர்த்தகம், சேவை வர்த்தகம், முதலீடு, மூல விதிகள் சுங்க மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட ஏழு அம்சங்களின் கீழ் குறித்த பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தாய்லாந்தின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் திணைக்கப் பணிப்பாளர் நாயகம் அவுரமோன் சுப்தாவிதும் தலைமையிலான 26 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் நேற்று நாட்டை வந்தடைந்தனர். இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது. 2021 ஆம் ஆண்டில், இலங்கையிலிருந்து தாய்லாந்திற்கான ஏற்றுமதி 59 மில்லியன் டொலர்களாகவும், தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் 355 மில்லியன் டொலர்களாகவும் இருந்தன. தாய்லாந்திற்கு…
The post இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்; முக்கிய பிரதானிகள் இலங்கைக்கு வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்; முக்கிய பிரதானிகள் இலங்கைக்கு வருகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
