2023இல் பாடசாலை நாட்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
6 view
2023ஆம் கல்வி ஆண்டில் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கான உத்தேச தவணைகள் மற்றும் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் கல்வி ஆண்டில் 175 நாட்கள் பாடசாலைகளை நடாத்த கல்வி அமைச்சு உத்தேசித்துள்ளது. இதன்படி முதலாந்தவணை மார்ச் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 20ஆம் திகதியோடு நிறைவடைகிறது. இது மூன்று கட்டங்களாக நடைபெறும். அதிலும் முதலாவது தவணையில் முதலாம் கட்டம் 27.03.2023 தொடக்கம் 04.04.2023 வரைக்கும் நடைபெறும். இரண்டாம் கட்டம் 20.04.2023 தொடக்கம் 12.05.2023 வரை நடைபெறும். மூன்றாம் கட்டம் 25.05.2023 தொடக்கம் 20.07.2023 வரை நடைபெறும். இரண்டாம் தவணை 24.07.2023 தொடக்கம் 13.10.2023 வரை உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி 56 நாட்கள் பாடசாலை நடைபெறும். இதேவேளை, மூன்றாம் தவணை 14.11.2023 தொடக்கம் 09.02.2024 வரையில் 58 நாட்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தேச தவணைகளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மே 13ஆம்…
The post 2023இல் பாடசாலை நாட்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023இல் பாடசாலை நாட்கள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
