அமைச்சர் எங்களை புறம் தள்ளிவிட்டார் – வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறோம் – கிராஞ்சிப் போராட்ட பெண் பரிமளம் தெரிவிப்பு!
6 view
கிராஞ்சியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட அட்டப்பண்ணைகளை அகற்றுங்கள் என 100 நாட்கள் போராட்டம் நடத்தியும் அமைச்சர் எங்களைப் புறம் தள்ளிவிட்டார் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அரும்பு பெண்கள் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைவி நிறஞ்சன் பரிமளா தெரிவித்தார். இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடகாமையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிராஞ்சி இலவன்குடா பகுதியில் பல காலமாக பெண்கள் இறால் மட நண்டு மற்றும் அட்டைகளை இயற்கையாகவே பிடித்து விற்பனை செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அப்பகுதிகளில் சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் முகமாக அட்டைப் பண்ணைகளை அமைத்துள்ளனர். அண்மையில் ஆளுநர் செயலகம் முன் முறையற்ற அட்டப்பனைகளை அகற்றுமாறு கோரி போராட்டம் நடத்திய பின் அமைச்சர் டக்ளாஸ் தேவானந்தாவின் அலுவலகத்திற்கு சென்று மஜகரை வழங்கினோம் . கடிதம் வழங்கியும் அமைச்சர் எமது கோரிக்கை தொடர்பில் எங்களுடன் பேசவில்லை மாறாக…
The post அமைச்சர் எங்களை புறம் தள்ளிவிட்டார் – வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறோம் – கிராஞ்சிப் போராட்ட பெண் பரிமளம் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமைச்சர் எங்களை புறம் தள்ளிவிட்டார் – வாழ்வாதாரத்துக்காகவே போராடுகிறோம் – கிராஞ்சிப் போராட்ட பெண் பரிமளம் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
