இறக்குமதி முட்டையால் உருவாகப்போகும் நோய்கள்! – எச்சரிக்கும் விற்பனையாளர்கள்
15 view
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கின்ற முட்டைகளால் மக்களுக்கு புது புது நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் தேவைக்கு அதிகமான முட்டைகள் இருப்பாதாகவும், ஆனால் அதனை தட்டுப்பாடு என்ற போர்வையில் விலையை அதிகரித்தது இந்த அரசாங்கமே என யாழ்ப்பாணத்திலுள்ள் முட்டை விற்பனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தற்போது வெளிநாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக எமது சமூகம் மீடியா விற்பனையாளர்களிடம் கேள்விகளை எழுப்பியிருந்தது. இதற்கு பதில் அளிக்கும் போதே முட்டை விற்பனையாளர் ஒருவர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார். முட்டையினை இறக்குமதி செய்வதற்கு தேவையான நிதியினை கொண்டு கோழி தீவனங்களை இறக்குமதி செய்தால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்றும் விற்பனையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் முட்டை உற்பத்தியாளர்களின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். முட்டையின் விலை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் கோழிக்கான தீவனங்களின் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த…
The post இறக்குமதி முட்டையால் உருவாகப்போகும் நோய்கள்! – எச்சரிக்கும் விற்பனையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறக்குமதி முட்டையால் உருவாகப்போகும் நோய்கள்! – எச்சரிக்கும் விற்பனையாளர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
