ஒரு வாக்கையாவது எங்களுக்கு வழங்குங்கள் – உமா சந்திரா யாழில் வேண்டுகோள்
12 view
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சி ஒன்று ஆளும் கட்சியைப்போன்று செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் உமா சந்திரா பிரகாஸ் இவ்வாறு தெரிவித்திருந்தார். இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் இலங்கை மக்களின் மனங்களை வென்ற தலைவராக இருக்கின்றார். எதிர்க்கட்சி என்ற வகையிலே இலங்கை சுதந்திரமடைந்த பின் ஆளுங்கட்சியை விமர்சிப்பது மட்டுமே செயற்பாடாக இருந்த நிலையை மாற்றி எதிர்க்கட்சியிலிருந்துகொண்டு மக்களுக்கான சேவைகளை வழங்கக்கூடிய ஆற்றல் உள்ளது என்பதை நிரூபித்த தலைவராக வரலாற்றிலே இடம்பிடித்துள்ளார். அந்த வகையிலே கொரோனாத் தொற்றுக் காலகட்டத்தில் வைத்தியசாலைகளுக்குத் தேவையான உபகரணங்களாகட்டும் பாடசாலைக்குத் தேவையான உபகரணங்களாகட்டும், அண்மையிலே பாடசாலை மாணவர்களுக்கு பேரூந்துகளை வழங்கும் செயற்திட்டமாகட்டும் மக்கள் சேவைகளுக்கு முன்னுரிமை அளித்துவரும் தலைவராக விளங்குகின்றார். அதே…
The post ஒரு வாக்கையாவது எங்களுக்கு வழங்குங்கள் – உமா சந்திரா யாழில் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஒரு வாக்கையாவது எங்களுக்கு வழங்குங்கள் – உமா சந்திரா யாழில் வேண்டுகோள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
