கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் இருந்த பங்காளிகளில் இணையலாம்!- தமிழரசின் மத்திய குழு முடிவு
6 view
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய கட்சிகளை இணைக்கக்கூடாது. தேவையென்றால், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் எந்தப் பங்காளிக் கட்சியில் இருந்தார்களோ, அந்தக் கட்சிகளில் இணைந்துகொள்ளலாம்” – என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்து விலகிச் சென்ற சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியை மீண்டும் கூட்டமைப்பில் இணைப்பதா என்பது தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன்போது, தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்து கூட்டமைப்பைப் பரந்துபட்ட அமைப்பாக மாற்ற வேண்டும் எனக் கோரி அதன் பங்காளிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் தலைவர்களால் அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது, கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் எந்தப் பங்காளிக் கட்சியில் இருந்தார்களோ, அந்தக் கட்சிகளில்…
The post கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் இருந்த பங்காளிகளில் இணையலாம்!- தமிழரசின் மத்திய குழு முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் முன்னர் இருந்த பங்காளிகளில் இணையலாம்!- தமிழரசின் மத்திய குழு முடிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
