வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வியை யாழில் ஆரம்பிக்க நடவடிக்கை! வெளியான அறிவிப்பு
6 view
ஐரோப்பிய நாடு ஒன்றின் பல்கலைக்கழகத்தின் கிளையை விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என இந்து பௌத்த பேரவையின் பொதுச் செயலாளர் தேசமாணிய எம் டி எஸ் இராமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் சனிக்கிழமை சிங்கள கற்கையை நிறைய பூர்த்தி செய்த ஆசிரியர் மாணவர்களை வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் மேலதிக பயிற்சி நெறியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் உள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து குறித்த செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான முன்னேற்பாடாக குறித்த பல்கலைக்கழகத்துடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாதியர் கல்வி, பொறியியல் ஹோட்டல் முகாமைத்துவம், சந்தைப்படுத்தல் போன்ற துறைகளைச் சார்ந்த உயர்கல்வி குறித்த பல்கலைக்கழகத்தின் ஊடாக…
The post வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வியை யாழில் ஆரம்பிக்க நடவடிக்கை! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெளிநாட்டு பல்கலைக்கழக கல்வியை யாழில் ஆரம்பிக்க நடவடிக்கை! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
