மின் கட்டண மீள் அதிகரிப்பு – இறுதி தீர்மானம் நாளை?
7 view
மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளைய தினம் இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த பின்னணியில் இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. எனினும் அன்றைய தினம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நாளை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
The post மின் கட்டண மீள் அதிகரிப்பு – இறுதி தீர்மானம் நாளை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் கட்டண மீள் அதிகரிப்பு – இறுதி தீர்மானம் நாளை? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
