சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்புவதாக பணமோசடி – தமிழர் பகுதியில் இருவர் கைது!

6 view
இலங்கை கடற்படையினர், இலங்கையின் காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலியான உத்தரவாதங்களை வழங்கிப் பலரிடம் பணம் பெற்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், 30 மற்றும் 41 வயதுடைய இந்த இருவரும் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள், சிலாபம் மற்றும் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்டவர்களாவர். 20 பேரிடம் இருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பணத்தை இவர்கள் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post சட்டவிரோதமாக வெளிநாடு அனுப்புவதாக பணமோசடி – தமிழர் பகுதியில் இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース