தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பின் புதிய உத்தி! சுமந்திரன் வெளியிட்ட தகவல்
6 view
தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சுமந்திரன், “உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன. தற்போது நடைமுறையில் உள்ள உள்ளுராட்சி முறைமைகளானது ஒரு குறித்த சபையில் ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினமானது என்பதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம். 60வீதம் வட்டாரத்திற்கும் 40வீதம் விகிதாசரத்திற்குமாக இருக்கின்றபோது வட்டாரத்தில் முழுமையாக வெற்றிபெற்றாலும் முழுமையாக அறுதிப்பெரும்பான்மையினை பெறுவது கஷ்டமாகும். சில அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களை போட்டியிட வைத்து சில நூறு வாக்குகளைப்பெற்று ஆசனங்களை பெற்றதன்…
The post தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பின் புதிய உத்தி! சுமந்திரன் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பின் புதிய உத்தி! சுமந்திரன் வெளியிட்ட தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
