சுமந்திரனுக்கு தகுதி இல்லை- குற்றம் சுமத்திய கஜேந்திரகுமார்!
7 view
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ரணிலுடன் பேச்சுவார்தை மேசைக்கு சென்ற பின்னர் அதில் முன்னேற்றம் இல்லை என தெரிவிப்பாராக இருந்தால், அவர் தமிழ் இனத்தின் தலைவராகவோ அல்லது பேச்சாளராகவோ இருப்பதற்கு தகுதி அற்றவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பபட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அத்துடன் இது ஒரு தேர்தலுக்குரிய காலப்பகுதி இல்லாமல் இருந்திருந்தால் பேச்சுவார்த்தையில் பாரிய முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்திருப்பார்கள் என்றும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post சுமந்திரனுக்கு தகுதி இல்லை- குற்றம் சுமத்திய கஜேந்திரகுமார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரனுக்கு தகுதி இல்லை- குற்றம் சுமத்திய கஜேந்திரகுமார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
