கோட்டாவின் தான்தோன்றித்தனமே அவர் விரட்டப்பட்டமைக்குக் காரணம்! – முன்னாள் சகா விமல் சுட்டிக்காட்டு!
6 view
“கோட்டாபய ராஜபக்சவின் தண்னிச்சையான முடிவுகளும், அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டப்பட்டமைக்குப் பிரதான காரணம்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “கோட்டாபய, மக்கள் வழங்கிய ஆணைக்குச் சிறிதளவும் மதிப்புக் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டார். அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நான் தட்டிக் கேட்டபடியால் எனது அமைச்சுப் பதவியும் பறிபோனது. கோட்டாபயவின் இப்படியான செயற்பாடுகள் இறுதியில் ராஜபக்ச குடும்பத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது மட்டுமன்றி ஒட்டுமொத்த ராஜபக்சக்களும் பதவிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள். ராஜபக்சக்களின் கட்சியுடன் நாம் இனிமேல் கூட்டணி அமைக்கவேமாட்டோம்” – என்றார்.
The post கோட்டாவின் தான்தோன்றித்தனமே அவர் விரட்டப்பட்டமைக்குக் காரணம்! – முன்னாள் சகா விமல் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டாவின் தான்தோன்றித்தனமே அவர் விரட்டப்பட்டமைக்குக் காரணம்! – முன்னாள் சகா விமல் சுட்டிக்காட்டு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
