பௌத்த மதத்தை எதிர்ததால் சட்ட நடவடிக்கை! – வலியுறுத்தும் தேரர்
6 view
பௌத்த மதத்திற்கு எதிராக உள்ள அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னிச்சையாகவும் கட்டுப்பாடு இன்றியும் செயற்படுகின்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் வலியுறுத்தியுள்ளார். தலதா மாளிகை தொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்து தற்போது விளக்கமறியலிலுள்ள சேபால் அமரசிங்கவை போன்று இன்னும் பலர் நாட்டிலுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சேபால் அமரசிங்க பௌத்த மதத்தை அவமதிக்கும் நபர்களில் ஒரு நபர் மாத்திரமே. இப்படியான நபர்கள் நாட்டில் பலர் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கைது செய்யப்பட்ட சேபால் அமரசிங்க எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The post பௌத்த மதத்தை எதிர்ததால் சட்ட நடவடிக்கை! – வலியுறுத்தும் தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பௌத்த மதத்தை எதிர்ததால் சட்ட நடவடிக்கை! – வலியுறுத்தும் தேரர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
