காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்!
6 view
காங்கேசன்துறை- காரைக்கால் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் அமைச்சின் செயலாளர் அடங்கிய குழு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது. காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னேற்பாடாக இறங்குதுறை மற்றும் சுங்கப் பகுதி கட்டுமானங்களை ஆரம்பிப்பது தொடர்பில் கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரூவான் சந்திர தலைமையிலான குழுவினர் வடமாகாண ஆளுநருக்கு தெளிவுபடுத்தினர். குறித்த கலந்துரையாடலில் சுங்கத் தினைகளை அதிகாரிகளும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
The post காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் ஆளுநர் தலைமையில் முக்கிய கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
