புலிகளை போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழியுமா?
11 view
இறுக்கமான கட்டமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் காணப்பட்டதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போனதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை போன்று தமது அமைப்பு இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அவருடைய கடைசி காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல அரசியல் ஆய்வாளர்கள் பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்கின்ற முக்கிய நபர்கள் ஆகியோர் பலர் அவருக்கு உயிர் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார்கள். பலர் அவரை இந்த நாட்டை விட்டு தற்காலிகமாக வெளியே வரச்சொல்லி கேட்டார்கள், நான் இந்த வருடத்தினை தாண்ட மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால்…
The post புலிகளை போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளை போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழியுமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
