அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு – இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை
6 view
அமெரிக்காவில் தோன்றியுள்ள புதிய எக்ஸ்பிபி.1.5 கொரோனா மாறுபாடு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்ட நாடுகளில் அந்த மாறுபாடு வேகமாக பரவி வருவதாக சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார். எக்ஸ்பிபி.1.5 மாறுபாடு எக்ஸ்பிபி தொடரிலிருந்து வந்தது, இது முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. 2022 நவம்பர் முதல் இலங்கையில் எக்ஸ்பிபி வரிசை மாறுபாடு கண்டறியப்பட்டபோதிலும், எக்ஸ்பிபி.1.5 மாறுபாட்டை இன்னும் கண்டறியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அனைத்து நாடுகளிலும் நுழைந்தது போல, அமெரிக்காவிலிருந்து எக்ஸ்பிபி.1.5 விரைவில் இலங்கைக்குள் நுழையும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை கொரோனா வரிசைமுறை ஒவ்வொரு மாதமும் தொடர்கிறது என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறைத் தலைவர் நீலிகா மாளவிகே தெரிவித்தார். எவ்வாறாயினும், சில நாடுகளில் பரவி வரும் எக்ஸ்பிபி.1.5 இலங்கையில் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதை அவர்…
The post அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு – இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா திரிபு – இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
