13வது திருத்தச் சட்டத்திற்கான முழுமையான அதிகாரம் மீண்டும் வழங்கப்படவேண்டும்- டக்ளஸ் கோரிக்கை!
6 view
13வது திருத்தச் சட்டத்திற்கான முழுமையான அதிகாரம், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் மீண்டும் வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் சந்திப்பு தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமல்ப்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் முதல் கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலமும், நிர்வாக ஏற்பாடுகளுக்கு ஊடாகவும் காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீளக் கையளிக்க வேண்டுமென வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
The post 13வது திருத்தச் சட்டத்திற்கான முழுமையான அதிகாரம் மீண்டும் வழங்கப்படவேண்டும்- டக்ளஸ் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13வது திருத்தச் சட்டத்திற்கான முழுமையான அதிகாரம் மீண்டும் வழங்கப்படவேண்டும்- டக்ளஸ் கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
