மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை
6 view
மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமரிக்க நாடான ஈக்வடார் நாட்டில் ஒரு தம்பதி விவாகரத்து கோரும் போது, அவர்களுடைய பெண் குழந்தைகள் தாயிடமே வளர வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால், சட்டத்திற்காக தன் பாசத்தை கட்டுப்படுத்த முடியாத தந்தை ஒருவர், தன் மகள்களுக்காக பாலினத்தையே மாற்றிக் கொண்டு தாயாக மாறி இருக்கிறார். ரெனே சாலினாஸ் ராமோஸ்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராமோஸும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி பெண் குழந்தைகள் தாயிடம் தான் இருக்க வேண்டும் என்பதால், ராமோஸின் இரண்டு மகள்களும் அவரது மனைவியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். ஆனால், தன் மனைவியும், அவரது குடும்பத்தாரும் தனது மகள்களைக் கொடுமைப்படுத்துவதாக கேள்விப் பட்டுள்ளார் ராமோஸ். அதோடு,…
The post மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
