வடக்கு கிழக்கில் 25 வீத இராணுவக் குறைப்பு கோரிக்கை – அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்!
6 view
இலங்கையின் தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் நேரத்தில், 1983க்கு முந்திய காலப்பகுதியில் தமிழ்ப் பகுதிகளில் இருந்ததைப் போன்று இராணுவப் பிரசன்னத்தை குறைக்க வேண்டும் என்ற இலங்கையை தளமாகக் கொண்ட தமிழ் சிவில் சமூகக் குழுக்களின் கூட்டு அழைப்பை அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல புலம்பெயர் தமிழ் குழுக்கள் அங்கீகரித்துள்ளன. அத்துடன் சம்பிரதாயமான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் தமிழர் பகுதிகளில் இருந்து 25 வீத இராணுவ பிரசன்னத்தை இலங்கை குறைக்க வேண்டும் என்று இலங்கையின் சிவில் குழுக்கள் கோரியுள்ளன. இது பேச்சுவார்த்தைக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் அவை சுட்டிக்காட்டியுள்ளன. பதின்மூன்று வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழர் பிரதேசங்களில் பாரிய இராணுவ பிரசன்னம் தொடர்கிறது. 1983 ஆம் ஆண்டு முதல் தமிழர் பகுதிகளில் அதிகப்படியான இராணுவக் கட்டியெழுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய அட்டூழியங்களைச் செய்த அதே துருப்புக்களே பாதிக்கப்பட்டவர்களிடையே நிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக…
The post வடக்கு கிழக்கில் 25 வீத இராணுவக் குறைப்பு கோரிக்கை – அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு கிழக்கில் 25 வீத இராணுவக் குறைப்பு கோரிக்கை – அமெரிக்க அமைப்புக்கள் அங்கீகாரம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
