மட்டு அரசியலில் திடீர் குழப்பம்: தமிழரசுக் கட்சியின் முக்கிய ஆசனத்தை கைப்பற்றிய சாணக்கியன் எம்.பி?

15 view
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் நாளைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு  கூட்டத்தின் போது  பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகவே  தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
The post மட்டு அரசியலில் திடீர் குழப்பம்: தமிழரசுக் கட்சியின் முக்கிய ஆசனத்தை கைப்பற்றிய சாணக்கியன் எம்.பி? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース