மாடுகள் திருட்டுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு!
9 view
மூதூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன.அண்மைக் காலமாக 100 க்கும் மேற்பட்ட மாடுகள் திருடப்பட்டுள்ளன. தமது மாடுகளை திருட்டுக் கொடுத்த சுமார் 50 க்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லீம் மாடு வளர்ப்பாளர்கள் , மூதூர் பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து குறித்த பிரச்சினை தொடர்பாக முறைப்பாடுகளை முன்வைத்தனர். இதன்பின்னர் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைவாக பாதிக்கப்பட்ட மாட்டு உரிமையாளர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் திருட்டு சம்பவம் தொடர்பிலான பொலிஸ் முறைப்பாடுகளையும் பதிவு செய்தனர். அத்தோடு சந்தேகமுள்ள நபர்களின் பெயர்களையும் மூதூர் பொலிஸில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post மாடுகள் திருட்டுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாடுகள் திருட்டுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
