திருமலையில் இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

6 view
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க எனும் தொணிப் பொருளின்கீழ் திருகோணமலை -மகேசர் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதில் இளைஞர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் என பலரும் பங்குபற்றியிருந்தனர். இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள இவ் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை 06 நாட்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post திருமலையில் இரண்டாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース