எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அறிவிப்பு!
19 view
2024 தமிழ் – சிங்கள புத்தாண்டு வரை எந்த வகையிலும் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தலைவர் முதித பீரிஸ் உறுதியளித்தார். லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் கடந்த 6 மாதங்களில் ஒரு பில்லியனுக்கும் அதிக இலாபமீட்டியுள்ளது. உள்நாட்டு வங்கிக் கடன்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்தோடு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் , பெப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் விலை திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் முதித பீரிஸ் தெரிவித்தார். கொழும்பிலுள்ள லிட்ரோ அலுவல கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர், உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை குறைவடைந்துள்ளமை மற்றும் விலை சூத்திரத்திற்கமைய விலை குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
The post எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படலாம் என அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
