சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வலியுறுத்தி யாழில் 2ம் நாளாக போராட்டம்!
19 view
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தி யாழ்ப்பாணம்- நாவற்குழியில் இரண்டாவது நாளாக இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.
The post சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வலியுறுத்தி யாழில் 2ம் நாளாக போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வலியுறுத்தி யாழில் 2ம் நாளாக போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
