இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா மீண்டும் உறுதியளித்துள்ளது!

8 view
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா உறுதியளித்துள்ளது. அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கிடையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு மாணவர்களை மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கும் வகையில் அவுஸ்ரேலிய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் இணைந்த வளாகங்களை நிறுவ முடியும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள, குறிப்பாக சுமார் 75 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர் பெறுமதியான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு வழங்கியமைக்காக பிரதமர் அவுஸ்ரேலியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் பாரிஸ் கிளப் கூட்டங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக உயர் ஸ்தானிகர் ஸ்டீபன்ஸ் உறுதியளித்துள்ளார்.
The post இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலியா மீண்டும் உறுதியளித்துள்ளது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース