யாழில் இரண்டு பெண்கள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
6 view
நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்களான இரண்டு பெண்களும், 2000 ரூபா பணத்தை வைப்பிலிட்டு நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் இருவரும் நேற்று முன் தினம் (04) பிற்பகல் காங்கேசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கைது செய்யப்பட்ட பெண்கள் 36 மற்றும் 38 வயதுடைய வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்கள் இன்று (05) பெதுருதுடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நெல்லியடி பொலிஸாரும் காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post யாழில் இரண்டு பெண்கள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post யாழில் இரண்டு பெண்கள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் இரண்டு பெண்கள் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
