அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க: நெடுங்கேணியில் கவனயீர்ப்பு போராட்டம்!

12 view
நெடுங்கேணி நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணைய வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இதன் போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க, வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கபட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர். இதன் போது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஊடகங்களுக்கு வாசித்து காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க: நெடுங்கேணியில் கவனயீர்ப்பு போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース