எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சார தொழில் ஈடுபட்ட யாழ். மற்றும் வவுனியா யுவதிகள் !
6 view
எங்கும் வேலை கிடைக்காத நிலையில் குடும்பத்தை நடத்துவதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கொழும்பு விபச்சார விடுதியில் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த யுவதிகள் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து கொழும்பில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த 7 யுவதிகள் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுமிகளின் வாக்குமூலம் மனதை உருக்கும் வகையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. மஹரகம பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட இந்த விபச்சார நிலையத்தில் பணிபுரிந்த யுவதிகள் யாழ்ப்பாணம், வவுனியா, ஹந்தலை, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பம்பரக்கலை, நாவலப்பிட்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இந்த யுவதிகள் கொழும்பில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிவதாக குறிப்பிட்டு குடும்பத்தாருக்கு பணம் அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. The post எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சார தொழில்…
The post எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சார தொழில் ஈடுபட்ட யாழ். மற்றும் வவுனியா யுவதிகள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எங்கும் வேலை கிடைக்காத நிலையில், குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சார தொழில் ஈடுபட்ட யாழ். மற்றும் வவுனியா யுவதிகள் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
