யாழ் மாநகர மேயர் பதவியில் தொடர்ந்தும் இழுபறி..! மணிவண்ணன் தரப்பு எடுத்த அதிரடி முடிவு!
6 view
யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவியிலிருந்து தாம் இராஜினாமா செய்வதாக கடந்த மார்கழி இறுதி வாரத்தில் அறிவித்தார். அதேவேளை தனது இராஜினாமா கடிதத்தை யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அனுப்பியிருந்தார். இந்நிலையில் மாநகர கட்டளை சட்டத்தின் பிரகாரம் புதிய மாநகர முதல்வர் தேர்வு செய்ய முடியாது என யாழ் மாநகர சபையில் மணிவண்ணன் அணி சார்பு உறுப்பினர் வரதராஜா பார்த்தீபன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை வட மாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஆளுநரின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு இடையிலான சந்திப்பில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
The post யாழ் மாநகர மேயர் பதவியில் தொடர்ந்தும் இழுபறி..! மணிவண்ணன் தரப்பு எடுத்த அதிரடி முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாநகர மேயர் பதவியில் தொடர்ந்தும் இழுபறி..! மணிவண்ணன் தரப்பு எடுத்த அதிரடி முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
