தேசிய இளைஞர் தளம் – விரைவில் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு
6 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்தாக உருவாக்கப்படவுள்ள தேசிய இளைஞர் தளத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2048ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் பலம்மிக்க இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு பங்காளர்களாவதற்கு இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், 25 வருட கால அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் இளைஞர் சமூகத்தை பொறுப்பான பங்காளர்களாக ஈடுபடுத்துவதற்காகவும் தேசிய இளைஞர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2048ஆம் ஆண்டளவில், தற்போதைய தலைமுறை இளைஞர்கள் பெரியவர்களாக வளர்ந்து நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளில் முக்கிய பங்கு வகிப்பார்கள். இதன்படி, எதிர்கால அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் பற்றி குறை கூறாமல் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்னின்று செயற்பட வேண்டும் என்பதும், அதற்கான சிறந்த வாய்ப்பாக தேசிய இளைஞர் தளம் அமையும் என்பதே…
The post தேசிய இளைஞர் தளம் – விரைவில் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேசிய இளைஞர் தளம் – விரைவில் விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
