சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் கோட்டா!
6 view
தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பயணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (5) காலை நாடு திரும்பினார். இன்று முற்பகல் அவர் தமது குடும்பத்தினருடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரியவருகின்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் அவர் அமெரிக்காவிற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவருடன் முன்னாள் முதல் பெண்மணி அயோமா ராஜபக்ஷ, மகன் மற்றும் மருமகள் மற்றும் அவரது பேரக்குழந்தையும் ஆகியோரும் சென்றிருந்தனர். இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அமெரிக்க குடியுரிமையை மீட்டெடுக்க விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார நெருக்கடியால் தூண்டப்பட்ட பல மாத ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை ஒரு பெரிய கூட்டம் முற்றுகையிட்டதையடுது்து 2022 ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறினார். 73 வயதான அவர்…
The post சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் கோட்டா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுற்றுலாவை முடித்து நாடு திரும்பினார் கோட்டா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
