கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை! செல்வம் எம்.பி.
6 view
தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து நேற்று (4) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த தேர்தலையும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறோம். அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலையும் நாங்கள் சந்திக்க வேண்டும். எனினும் தேர்தல் முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த முறையானது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆளுகின்ற நிலை இல்லாத முறையாக இருக்கிறது. மக்களினுடைய எண்ணங்கள் புறக்கணிக்கப்படுகின்றது. அந்த வகையில் தேர்தல் முறை மாற்றப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது. உள்ளூராட்சி…
The post கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை! செல்வம் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிரைகளுக்காக தனித்தனியாக போட்டியிடுவது கூட்டமைப்பின் இலட்சியம் இல்லை! செல்வம் எம்.பி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
