வவுனியாவில், நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்து!

6 view
வவுனியா மூன்று முறிப்பு பகுதியில், இன்று இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (04) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாத்தளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ9 வீதியில் சென்ற கார் மூன்று முறிப்பு பிள்ளையார் கோவிலுக்கு சமீபமாக வீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதியது இதன் போது முச்சக்கரவண்டியில் அமர்ந்திருந்த மூன்று முறிப்பு பகுதியை சேர்ந்த சிங்காரவேல் சண்முகதாசன் வயது 58 என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ் விபத்து ஏற்படுத்திய காரின் சாரதி, சேதமடைந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் என்பன வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post வவுனியாவில், நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியுடன் கார் மோதி விபத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース