வீணாக்கப்படும் வரியை முறையாக பாதுகாக்கலாம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
10 view
வீணாக்கப்படும் 700 மில்லியன் தொகையை முறையாக கையாண்டால் 200 மில்லியன் வரியை பாதுகாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. மல்லாவி, மன்னார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. தன்னிச்சையான அசாதாரண வரி திருந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அச்சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இதேவேளை, பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மறைமுகமான வரி அதிகரித்துள்ளது. பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் வரி திணிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அரச உத்தியோகத்தர்களிற்கும் வரி திணிக்கப்படுகிறது. இதுவரை அரச உத்தியோகத்தர்களிற்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் பாரிய பாதிப்பை இந்த வரி அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக…
The post வீணாக்கப்படும் வரியை முறையாக பாதுகாக்கலாம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீணாக்கப்படும் வரியை முறையாக பாதுகாக்கலாம் – மருத்துவ அதிகாரிகள் சங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
