யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு!
6 view
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. 2023 ஜனவரி 3ம் திகதி முதல் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவாகி யாழ்ப்பாணம் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரனால் நியமிக்கப்பட்டனர். யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளன அலுவலகத்தில் இன்று புதன்கிழமை(04) இடம்பெற்ற கூட்டத்திலே கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. இதன்படி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவராக சிறிகந்தவேல் புனித பிரகாஸ் தெரிவானார். மேலும், உபதலைவராக அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் ரட்ணகுமார், செயலாளராக யூலியன் சகாயராசா, பொருளாளராக தங்கவேல் தங்கரூபன், நிர்வாக உறுப்பினர்களாக குணரட்ணம் குணராஜன், செபமாலை அன்ரன் செபராசா,சரவணபவானந்தன் சிவகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
The post யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ், மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
