மருத்துவத்துறைக்கான முட்டை விநியோகம் முற்றாக நிறுத்தம்!
6 view
நாட்டின் மருத்துவத்துறைக்கான முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதை அடுத்து விநியோகஸ்தர்கள் முட்டை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரசாங்க வைத்தியசாலைகளிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 10,000 முட்டைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 12,000 முட்டைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது வைத்தியசாலைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
The post மருத்துவத்துறைக்கான முட்டை விநியோகம் முற்றாக நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவத்துறைக்கான முட்டை விநியோகம் முற்றாக நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
