ஓயாத முயற்சிகளின் பலனாக கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு! – டக்ளஸ்
18 view
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தொடர்ச்சியான முயற்சிகளின் பலனாகவே, அறுவடையின் பின்னர் பழுதடையும் கடலுணவுகளின் தொகையை குறைப்பதற்கான குளிரூட்டல் பொறிமுறை உருவாக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிதார். அறுவடைக்குப் பின்னர் பழுதடைகின்ற கடலுணவுகளின் அளவினை குறைப்பதன் மூலம் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் கடற்றொழிலாளர்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் நிதிப் பங்களிப்புடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப பொறிமுறையை பலநாள் மீன்பிடிக் கலன்களில் பொருத்துவதற்கான முன்மாதிரி திட்டம் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ‘கடலுணவுகள் அநியாயமாக விரயமாவதை குறைத்து, கடற்றொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் புதிய பொறிமுறையை உருவாக்குவதற்கு உதவிய செய்த, கடற்றொழில் அமைச்சு திணைக்களக்களுக்கும், ஏனைய துறைசார் திணைங்களுக்கும்…
The post ஓயாத முயற்சிகளின் பலனாக கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு! – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓயாத முயற்சிகளின் பலனாக கடற்றொழில் சார் பிரச்சினைகளுக்கு தீர்வு! – டக்ளஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
