யாழில் 'குளோக்கல் பெயார் 2023' கண்காட்சி!
7 view
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முற்றவெளியில் பெப்ரவரி மாதம் 25 மற்றும் 26ம் திகதி நடைபெறவுள்ள ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பங்கேற்புடன் இன்று புதன்கிழமை(04) காலை 10:30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) முரளிதரன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி,மாவட்ட செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் வருகின்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ‘குளோக்கல் பெயார் 2023’ கண்காட்சிக்கு செய்ய வேண்டிய ஒழுங்குபடுத்தார்கள் அதற்கு பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இந்த கண்காட்சி…
The post யாழில் 'குளோக்கல் பெயார் 2023' கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 'குளோக்கல் பெயார் 2023' கண்காட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
