டுபாயில் விடுமுறையை கழிக்கும் கோட்டா..! அடுத்தடுத்து வைரலாகும் புகைப்படங்கள்
7 view
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாய் சென்றுள்ளார். கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் டுபாயிலுள்ள மிராக்கிள் கார்டனுக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியிருந்த போதும் அவருக்கு அமெரிக்க விசா அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கோட்டாபய அமெரிக்கா செல்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவர் விடுமுறையை கழிப்பதற்காக குடும்பத்துடன் டுபாய் சென்றுள்ளார். இன்னும் சில தினங்களில் நாடு திரும்புவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன. இந்நிலையில் கோட்டாபயவின் டுபாய் பயணத்தின் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
The post டுபாயில் விடுமுறையை கழிக்கும் கோட்டா..! அடுத்தடுத்து வைரலாகும் புகைப்படங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டுபாயில் விடுமுறையை கழிக்கும் கோட்டா..! அடுத்தடுத்து வைரலாகும் புகைப்படங்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
