இலங்கைக்கு வரவிருந்த கடலட்டைக்கு ஏற்பட்ட நிலை!
7 view
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயிரம் கிலோ கடல் அட்டை வேதாளைப் பகுதியில் புலனாய்வு அதிகாரிகளானால் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை கடத்துவதாக இந்திய புலனாய்வு அதிகாரிகளிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வேதாளை கடற்கரையில் ஓர் படகை சோதனை செய்த சமயமே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் வெளி இணைப்பு இயந்திரங்கள் இரண்டு பொருத்திய நிலையில் ஓர் நாட்டுப் படகில் கடல் அட்டைகள் ஏற்றிய நிலையில் கடல் அட்டை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது படகில் கடல் அட்டையை கடத்த முற்பட்ட இருவர் தமிழக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post இலங்கைக்கு வரவிருந்த கடலட்டைக்கு ஏற்பட்ட நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கைக்கு வரவிருந்த கடலட்டைக்கு ஏற்பட்ட நிலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
