கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி
6 view
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் திருத்தந்தை இறைபதமேந்தியதையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (புதன்கிழமை) முற்பகல் கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், பதினாறாம் பெனடிக்ட் பரிசுத்தப் பாப்பரசரின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.
The post கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
