மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு!
15 view
மாற்றத்திற்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணய குழுவினை இன்று(புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாற்றத்தினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது ஜனநாயக நீதியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். எனவே அவர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த தேர்தலுக்கு தயாராக வேண்டும். அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நிதி இல்லை என சொல்லும் நொண்டி சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்கு…
The post மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாற்றத்திற்காக போராடியவர்களை தேர்தலுக்கு தயாராகுமாறு சாணக்கியன் அழைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
