ஆளுநரின் கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை! கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதிரடி
6 view
யாழ். மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழித் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு வாக்களிப்பின் போது பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் தோற்றகடிக்கப்பட்டதை அடுத்து, மாநகர முதல்வர் – சட்டத்தரணி மணிவண்ணன் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து யாழ். மாநகர சபையில் இக்கட்டான நிலையொன்று தோன்றியிருந்தது. இந்நிலையில், மாநகர சபைக்குப் புதிய முதல்வர் ஒருவரைத் தெரிவு செய்வது தொடர்பில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரினால் சட்டமா அதிபரின் ஆலோசனையும் கோரபட்டுள்ள அதே நேரம் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்றால் நீதிமன்றத்தை நாடி அதனைத் தடுப்போம் என்று முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உறுப்பினர்களிடையே சமரச…
The post ஆளுநரின் கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை! கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆளுநரின் கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை! கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதிரடி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
