இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்!
20 view
கட்டுவன – உருபோக வீதியில் ருக்மல்பிட்டிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கத்வானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தந்தை உயிரிழந்துள்ளார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மகன் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் 66 வயதுடைய தந்தையும் 28 வயதுடைய மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் உயிரிழந்த மகன் திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே ஆவார். இந்நிலையில், மணப்பெண் திருமண விருந்து கொடுத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அன்றைய தினம் மகனுக்கு 28வது பிறந்தநாள் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். The post…
The post இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த விபரீதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
